பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றது. இவற்றைத் தொடர்ந்து பிரான்ஸ் பத்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 26,896 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,18,873 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,637 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமன்றி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை கூறியுள்ளது.