உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிற குரங்கு அம்மையை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு கடந்த 23ஆம் தேதி அறிவித்துள்ளது. இந்த சூழலில் பிரான்ஸ் நாட்டில் அதிக திறன் கொண்ட குரங்கு அம்மை தடுப்பூசி மையங்கள் நேற்று திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த நாட்டில் கடந்த வாரம் மட்டுமே 1,567பேருக்கு இந்த நாய் தொற்று பரவி இருப்பதும் தலைநகர் பாரிஸில் மட்டும் 726 பேருக்கு குரங்குமை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். தற்போது பிரான்சில் 1,200க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்த நிலையில் தான் அங்கு குரங்கு அம்மை தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றது.
Categories