பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் மட்டும் 10,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் நாட்டில் கொரோனாவின் பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது தீவிரமடைந்துள்ளது. பிரான்சில் ஒரே நாளில் மட்டும் 10,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதால், தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,73,911 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனாவால் ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 30,910 ஆக உயர்ந்துள்ளது.