பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது.உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் அதனைத் தொடர்ந்து பிரேசில் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் பத்தாவது இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,505 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,43,479 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 96 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,779 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை கூறியுள்ளது.