Categories
உலக செய்திகள்

பிரான்ஸில் தடுப்பூசியைப் புறக்கணித்த பிரபலங்கள்…. இறுதியில் நேர்ந்த சோகம்….!!

பிரான்சில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத பிரபல இரட்டையர்களின் மரணம் குறித்த பல முக்கியமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் தொலைக்காட்சி நட்சத்திரங்களான இரட்டையர்கள் Grichka மற்றும் Igor Bogdanoff இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் தங்கள் ஆரோக்கியமான உடல் நலம் மற்றும் பாதுகாப்பை கெடுக்கும் எனக்கூறி தடுப்பூசிகளை புறக்கணித்து விட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் Grichka டிசம்பர் 28ஆம் தேதியன்று இறந்தார். இதனைத் தொடர்ந்து ஜனவரி 3ஆம் திகதி அவரது சகோதரர் Igor Bogdanoff என்பவரும் பிரான்சில் உள்ள Georges-Pompidou மருத்துவமனையில் இறந்துள்ளார். தற்போது இவர்களுடைய வழக்கறிஞர் வழக்கறிஞர் Edouard de Lamaze, இவர்கள் இருவரும் கொரோனா தொற்றால் தான் இறந்துள்ளனர் என உறுதிபட தெரிவித்துள்ளார். 72 வயதாகும் இவர்கள் தடுப்பூசியைப் புறக்கணித்தது தான் இவர்களின் இறப்பிற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

Categories

Tech |