Categories
உலக செய்திகள்

பிரான்ஸ்ஸுக்கு பெரிய ஆபத்து…! புது வகை வைரசால் பீதி… ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் …!!

பிரிட்டனின் புதிய வைரஸ் தொற்றினால் பிரான்ஸ் அதிகம் பாதிக்கப்படுமென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் .

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பல கோடியை தாண்டிக்கொண்டிருக்கும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறைந்துள்ளதாக அந்நாட்டு தலைமையகம் கூறியுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏறக்குறைய  33 லட்சத்தையும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது .

இதற்கிடையே பிரான்சில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 20,000க்கும் கீழ் குறைந்துள்ளதால் இது ஒரு நல்ல அறிகுறி என்று அந்நாட்டின் சுகாதாரதுறை நிம்மதியடைந்து கொண்டு இருக்கும் நிலையில் பிரிட்டனில் பரவிக் கொண்டிருக்கும் புதிய கொரோனா வைரசால் மார்ச் மாதம் முதல் நாள்தோறும் 2000 மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என தொற்றியல் நிபுணர்களான பிலிப் அமுயல், லூக் டவுசெட் ஆகியோரின் ஆய்வின் அடிப்படையில் பேராசிரியர் அர்னாட் ஃபோண்டனெட் எச்சரித்துள்ளார். இந்நிலையில் பிரிட்டனின் புதிய வைரஸ்தொற்று  பிரான்சை பெரிய அளவில் பாதிக்கும் என்று  சுகாதாரத்துறை பேராசிரியர் பிலிப் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |