Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் அதிபர் தேர்தல்…. புதுச்சேரி காரைக்காலில் வாக்குப்பதிவு தொடக்கம்…!!!!!!

பிரான்ஸ் நாட்டின் 15வது அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் அதிபர் இமானுவேல் மேக்ரன்  உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் வசிக்கும் 4,564 பிரஞ்சு குடிமக்கள் வாக்களிக்கின்றனர். இதற்காக சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வாக்குச்சாவடி மையங்களில் அமைத்திருக்கிறது.

மேலும் புதுச்சேரி பிரஞ்சு துணை தூதரகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் காரைக்காலில் உள்ள அலியான்ஸ் உள்ள வாக்குச் சாவடிகளிலும் மக்கள் தங்களின் குடியுரிமை அடையாள அட்டையை காண்பித்து வரிசையில் நின்று வாக்களித்து கொண்டிருக்கின்றனர். முதல் சுற்று தேர்தலில் அறுதி பெரும்பான்மை பெறும் வேட்பாளர் அதிபராக அறிவிக்கப்படுகிறார். இல்லாவிடில் அதிக வாக்குகள் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்களுக்கும் வரும் 24ஆம் தேதி இரண்டாவது சுற்று தேர்தல் நடத்தப்பட்டு அதிபர் தேர்வு செய்யப்படுகிறார்.

Categories

Tech |