பிரான்ஸ் நாட்டின் அதிபராக இருந்து வரும் இமானுவேல் மேக்ரானின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து 12வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு 2 சுற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் தற்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பல அரசியல் கட்சிகளை சேர்ந்த நதாலி ஆர்தாட், நிக்கோலஸ் டூபோன்ட், ஆன் ஹிடால்கோ, யானிக்ஜடோட், ஜீன்லஸ்ஸல், மரைன் லி பென் உள்பட 12 பேர் களம் இறங்கினர். அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டப்படி 2 சுற்று தேர்தல் வாயிலாக அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம் ஆகும். அந்த வகையில் அந்நாட்டில் முதல் சுற்று அதிபர் தேர்தல் சென்ற 10ஆம் தேதி நடைபெற்றது. அப்போது 4.90 கோடி வாக்காளர்களுக்காக பல்லாயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.
அதன்பின் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவானது தொடங்கியது. மக்கள் வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர். இதற்கிடையில் இமானுவேல் மேக்ரானுக்கும், வலதுசாரி வேட்பாளரும், பெண் வக்கீலுமான மரைன் லு பென்னுக்கும் இடையில் கடும்போட்டி நிலவியது. முன்னதாக நடந்த முதல்சுற்று தேர்தலில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை. இந்த நிலையில் அதிபர் தேர்தலின் 2ஆம் கட்டம் நேற்று நடந்தது. காலை முதல் மாலை வரை மும்முரமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
அவற்றில் மேக்ரான் 58 % வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்க இருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டிபோட்ட மரைன் லு பென் 42 % வாக்குகளை பெற்றார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இமானுவல் மேக்ரானுக்கு பல நாட்டுத்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இமானுவேல் மேக்ரான் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ்நாட்டின் அதிபராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலமானது அடுத்த மாதம் நிறைவடைகிறது. இந்த நிலையில் புது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், தற்போது அவர் வெற்றிவாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.