பிரான்சை மிக விரைவில் சிவப்பு பட்டியலில் சேர்க்க உள்ளதாக பிரிட்டன் பிரதமர் தகவல் தெரிவித்துள்ளார்.
பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவி வருகின்றது. இதனால் பிரிட்டன் அரசு கொரோனாவின் மூன்றாவது அலை பரவிய நாடுகளின் பெயர்களை சிறப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. அந்தவகையில் தென்னாப்பிரிக்காவின் உருமாறிய கொரோனா பிரான்சில் பரவி வருவதால் விரைவில் அந்த நாடும் சிவப்புப் பட்டியலில் இடம்பெறும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இந்த சிவப்புப் பட்டியலில் பிரிட்டன் இடம்பெறாமல் இருப்பதற்காக அவர் பல்வேறு சட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றார். இந்நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் பிரிட்டனிலிருந்து தேவையான காரணமின்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு ரூ. 4,97,334 அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய சட்டத்தினை பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொண்டு வந்துள்ளார்.
மேலும் சிவப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளில் இருந்து மக்கள் பிரிட்டனுக்குள் வருவதற்கும் அவர் தடை விதித்துள்ளார். இதனிடையே அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகள் பக்க விளைவை ஏற்படுத்துவதாக புகார்கள் ஒரு பக்கம் எழுந்து கொண்டு இருக்கையில் இன்னொரு பக்கம் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரித்து வருவதால் விரைவில் இதனை கட்டுப்படுத்துவதற்காக ஒரு முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல் தெரிவித்துள்ளார்.