Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் மக்களை தாக்குவதற்கு திட்டம்.. 3 தீவிரவாதிகள் கைது.. வெளியான பரபரப்பு வீடியோ..!!

பிரான்சின் குடிமக்களை தாக்குவதற்கு குறிவைத்த தீவிரவாதிகள் கைதான வீடியோ வெளியாகியுள்ளது. 

பிரான்ஸின் குடிமக்களை ஸ்பெயினில் தாக்குதல் நடத்த திட்டம் போட்ட தீவிரவாதிகள் மூவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Granadaவில் இடம்பெற்றுள்ள ஜிகாதி தீவிரவாதத்தை  எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மூவர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

அதாவது காவல்துறையினர் ஒரு குடியிருப்பில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த மூவரையும் கைது செய்த வீடியோ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மோப்ப நாய்களுடன் அதிகாரிகள் மற்றும் ஆயுதமேந்திய படையினர் ஒரு வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து அந்த மூவரையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். மேலும் Granadaவில் இருக்கும் பிரான்ஸ் மக்களையும் அந்த மூவரும் குறிவைத்து தாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |