Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு சிறைத்தண்டனை… லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு… மேல்முறையீடு செய்வாரா..?

பிரான்ஸ் முன்னாள் அதிபர் மீதி லஞ்சம் வழங்கியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டு 2 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

பிரான்ஸ் அதிபராக கடந்த 2007ம் வருடம் முதல் 2012ஆம் வருடம் வரை நிக்கோலஸ் சர்கோசி பதவி வகித்தார். இந்நிலையில் இவர் மீது மாஜிஸ்திரேட்டிற்கு லஞ்சம் அளிக்க முயற்சி செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு பாரிஸ் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவருக்கு மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதாவது தண்டனையானது சிறையில் இரண்டு வருடங்களும், வீட்டு சிறையில் ஒரு வருடமும் இருக்கலாமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வீட்டு சிறையில் இருக்கும் சமயத்தில் அவரை கண்காணிக்க கண்காணிப்பு சிப் உடலில் பொருத்திக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இத்தீர்ப்பை நிக்கோலஸ் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Categories

Tech |