உடல் கருகி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியில் ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வமேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் அப்பகுதியில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளனர். அங்கு செல்வமேரி மெழுகுவர்த்தி ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக செல்வமேரியின் சேலையில் தீப்பிடித்து அவரது உடல் முழுவதும் வேகமாக பரவியது.
இதனையடுத்து உடல் கருகிய நிலையில் கிடந்த செல்வமேரியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வமேரி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.