தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மின்வெட்டும் கூடவே வந்துவிட்டது இன்று நத்தம் விசுவநாதன் கிண்டலடித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், நத்தம் தொகுதியில் அதிமுகவை சேர்ந்த நத்தம் விஸ்வநாதன் வெற்றி பெற்றார். இந்நிலையில் நத்தம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை இன்று அவர் திறந்து வைத்தார். அதையடுத்து செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்த அவர் தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின்வெட்டுக்கு காரணம் மின்துறை அமைச்சருக்கே மின் துறையை பற்றி சரியான புரிதல் இல்லாததுதான் என்று கூறினார்.
மேலும் தமிழகத்தில் மின்வெட்டை தீர்ப்பதற்கு முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மின்வெட்டும் வந்துவிட்டது. திருவிளையாடல் படத்தில் நாகேஷ் கூறுவதுபோல பிரிக்க முடியாதது எது என்றால் “திமுகவும் மின்வெட்டும்” தான் என்று கிண்டல் அடித்துள்ளார். அதிமுக ஆட்சியில் இருந்தபோது இதுபோன்ற மின்வெட்டு இருந்ததே இல்லை. மேலும் தமிழகம் மின்சாரத்தில் மின்மிகை மாநிலமாக திகழ்ந்தது என்று கூறியுள்ளார்.