ரஷ்யாவின் தலைமையில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக இன்று பங்கேற்கிறார்.
பிரிக்ஸ் நாடுகளின் 12வது மாநாடு இன்று நடைபெற உள்ளது. அந்த மாநாடு ரஷ்ய தலைமையில் நடைபெறுகிறது. அதில் இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. காணொலிக் காட்சி மூலமாக நடைபெறுகின்ற அந்த மாநாட்டில் இந்தியா சார்பாக பிரதமர் மோடி பங்கேற்கிறார். அந்த மாநாட்டில் கொரோனா பாதிப்பு, பயங்கரவாதத்தை முற்றிலும் ஒடுக்குவது, சுகாதாரம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் பற்றி விவாதம் செய்யப்பட உள்ளன.
இந்தியா மற்றும் சீனா இடையே கடந்த 6 மாதங்களுக்கு மேலாக எல்லையில் மோதல் நடந்து கொண்டிருக்கும், இந்த மாநாடு நடைபெறுவது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.