Categories
லைப் ஸ்டைல்

பிரிட்ஜில் வைத்த முட்டை…. சாப்பிட நல்லதா..? கெட்டதா? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்படும் முட்டைகள் சாப்பிட ஆரோக்கியமற்றது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முட்டையில் புரதம் மற்றும் கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. நாம் இந்த முட்டைகளை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து சேமித்து பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் தற்போதைய ஒரு புதிய ஆய்வின்படி முட்டைகளை குளிர் சாதனப்பெட்டியில் சேமித்து வைப்பதால் அவை ஆரோக்கியம் இல்லாததாக மாறிவிடுகிறது. குளிர்ந்த வெப்பநிலையில் முட்டைகளை சேமித்து வைப்பதும், பின்னர் அவற்றை வெப்ப நிலையைவிடுவதும் ஒடுக்கத்தை ஏற்படுத்தும், முட்டை ஓடுகளில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் இதனால் முட்டை ஆரோக்கியமற்ற உணவாகி விடுகிறது.

அறைவெப்பநிலையில் தான் முட்டைகள் சாப்பிட ஏற்றதாக உள்ளன என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இவற்றை மிகவும் குளிரான வெப்பநிலையில் சேமிப்பது சாப்பிட முடியாததாக மாறிவிடுகிறது. முட்டைகளை குளிர் சாதனப்பெட்டியில் சேமித்து வைப்பதால் முட்டை ஓடுகளில் பாக்டீரியாக்கள் வளர்ந்து அவை முட்டையினுள் நுழைகிறது. இதன் விளைவாக சாப்பிட முடியாததாக மாறுகிறது. எனவே பல ஆய்வுகளில் அறைவெப்பநிலையில் வைக்கப்படும் முட்டையே சாப்பிட உகந்தது என்று நிரூபணமாகியுள்ளது.

Categories

Tech |