தர்மபுரி மாவட்டத்தில் பத்மா உள்ளிட்ட இரண்டு பெண்கள் நரவலி கொடுக்கப்பட்ட நிலையில் எழந்தூர் சுற்றுவட்டத்தில் மட்டும் மூன்று பெண்கள் காணாமல் போய் உள்ளனர்.கடந்த ஐந்து வருடங்களில் கொச்சி நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 13 பெண்கள் காணாமல் போன நிலையில் ஒரு பெண் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 பெண்கள் என்ன ஆனார்கள் என்று இதுவரை எந்த ஒரு தகவலும் தெரியாத நிலையில் காணாமல் போன வழக்கை தற்போது கேரளா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில் பத்மா உள்ளிட்ட இரண்டு பெண்களை நரபலி கொடுத்த மந்திரவாதி ஷாபி,2018 ஆம் ஆண்டு முதல் பகவல் சிங் குடும்பத்துடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது . நான்கு ஆண்டுகளில் மேலும் சில நரபலி பூஜைகளை ஷாபி செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் நரபலி கொடுத்து வந்த பகவத்சிங் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் பிரிட்ஜிக்குள் இருந்து 10 கிலோ மனித இறைச்சியும், எலும்பு துண்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து நரபலி கொடுக்கப்பட்ட இடத்தை சுற்றி இருக்கும் பகுதிகளில் காணாமல் போயிருக்கும் 26 பெண்களின் நிலை என்ன என்ற பதற்றம் நிலவி வருகிறது. ஒருவேளை அந்த பெண்களும்நரபலி கொடுக்கப்பட்டு இருப்பார்களா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.