Categories
உலக செய்திகள்

பிரிட்டனின் கைவசம் இருக்கும் அஸ்ட்ராஜெனேகா…. தங்களால் ஐரோப்பிய ஒன்றியத்தை மிரட்ட முடியாது…. எச்சரிக்கை விடுத்த வெளியுறவுத்துறை அமைச்சர்…!!

பிரிட்டனில் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தடுப்பூசி இறக்குமதி செய்வது குறித்து பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அவை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்திடம் பல பில்லியன் டோஸ் தடுப்பூசிகள் கேட்டு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் குறைந்த அளவு தடுப்பூசிகளை மட்டுமே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின்  தலைவர் உர்சுலா வொன்டர் லெயன் கேட்டபோது தடுப்பூசி தயாரிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதனால் கோபமடைந்த அவர் “பிரிட்டனிற்கு மட்டும் குறித்த நேரத்தில் தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளீர்கள், எங்களுக்கு தரவேண்டிய தடுப்பூசிகளை முதலில் அனுப்பிவையுங்கள் அதன் பின்னர் மற்ற நாடுகளுக்கு கொடுங்கள் இல்லையென்றால் நெதர்லாந்திலிருந்து ஏற்றுமதியாகும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசிகள் ஐரோப்பிய ஒன்றிய நாட்டை கடந்து செல்ல விடாமல் அதற்கு தடை விதிக்கப்படும்” என்று கூறி மிரட்டியுள்ளார். இதற்கு கருத்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் “ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடுப்பூசிகள் தடை விதிப்பதால் பாதிப்பு அவர்களுக்குத்தான்” என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் ஒய்வெஸ் லி டிரையன்  “அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசிகளை கைவசம் வைத்துக் கொள்ளும் பிரிட்டனால் ஐரோப்பிய ஒன்றியத்தை மிரட்டிப்பார்க்க முடியாது, இந்த நிலைமை மீண்டும் நீட்டித்தால் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசிகளை இறக்குமதி செய்வதில் பிரிட்டனிற்கு சிக்கல்கள் ஏற்படும்” என்று கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |