தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பிரிட்டனில் இருந்து கொல்கத்தா வரும் அனைத்து விமானங்களும் ஜனவரி 3 முதல் மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏறும் முன் காத்திருப்பு நேரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொற்று அபாத்தில்லா நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.