Categories
உலக செய்திகள்

பிரிட்டனிலிருந்து போதைப்பொருள் கடத்திய நபர்…. இந்தியாவுக்கு அனுப்புங்கள்…. அரசின் அதிரடி உத்தரவு…!!

பிரிட்டனில் இருந்து போதைப்பொருள் கடத்திய நபர் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த  கிஷான் சிங்(38) என்பவர் பிரிட்டனில் குடிமகன் உரிமம் பெற்று வாழ்ந்து வந்தார். இவர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை பிரிட்டனில் இருந்து இந்தியாவில் விற்றதாக கடந்த 2016 ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு இந்தியா அளித்த புகாரின் அடிப்படையில் பிரிட்டன் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் கிஷான் சிங்கை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என முடிவுசெய்து வழக்கை விசாரித்து  கடந்த 2019 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்நிலையில் பிரிட்டன் அதிகாரிகள் தற்போது அவரை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கிஷான் சிங் கடந்த மார்ச் 21ம் தேதி பிரிட்டனிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |