பிரிட்டனில் 14 வயது சிறுவன் 5 பெண்கள் மீது பாலியல் ரீதியான தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளான் .
கடந்த மூன்று வாரங்களில் பிரிட்டனிலிலுள்ள லீட்ஸீல் 14 வயது சிறுவன் 19 லிருந்து 55 வயதான ஐந்து பெண்களுக்கு பாலியல் ரீதியான தாக்குதல் செய்ததாக சிறுவன் மீது புகார் வந்துள்ளது. இதன்படி பூங்காவில் 55 வயதான பெண்ணிடம் சிறுவன் தவறாக நடந்து கொண்டுள்ளான். அதேமாதிரி 29 வயது இளம்பெண்ணை பின்தொடர்ந்து அவரை அச்சுறுத்தும் வகையில் தவறாக தொட்டு மோசமான செயலை சிறுவன் செய்துள்ளான்.
இந்த மாதிரி 5 பெண்களிடம் சிறுவன் 3 வாரத்தில் தவறுகள் செய்துள்ளான். இது குறித்து போலீஸ் சிறுவனை கைது செய்துள்ளனர். போலீசார் இதுகுறித்து சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் சிறுவனால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா என்று தங்களிடம் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர் .