பிரிட்டன் மகாராணியார் தன் கணவர் இறந்த நிலையிலும் நாட்டு மக்களுக்காக பிறந்தநாள் செய்தியை வெளியிட்டுள்ளார்.
மகாராணியார் கணவர் இறந்த நிலையிலும் நாட்டு மக்களுக்கு தனது பிறந்தநாள் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் தன் பிறந்தநாளுக்கு வாழ்த்து செய்திகள் வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும் அரச குடும்பம் துக்கத்தில் இருந்த நிலையில் உலகம் முழுவதும் இருந்து வந்த இரங்கல் செய்திகளால் அரச குடும்பம் ஆறுதல் பெற்றது என்றும் அரச குடும்பத்தின் மீது நீங்கள் வைத்த பற்றுக்கும், பாசத்திற்கும் நன்றியை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
மகாராணியார் தங்களின் செய்திகள் மூலமாக என் கணவர் இத்தனை நபர்களின் நம்பிக்கையை சம்பாதித்துள்ளார் என்று நினைக்கையில் தான் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே மகாராணியார் தன் கணவரின் இறப்புக்குப் பிறகு மக்களுக்காக முதன் முதலாக தெரிவித்த செய்தி இது என்பது குறிப்பிடத்தக்கது.