Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் கடுமையான விதிமுறைகள்… வெள்ளிக்கிழமை முதல்… வெளியான அறிவிப்பு…!!

பிரிட்டனில் வரும் வெள்ளிக்கிழமை முதல் கடுமையான விதிமுறைகள் அமுலுக்கு வரவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. 

பிரிட்டனில் வரும் வெள்ளிக்கிழமை முதல் சர்வதேச போக்குவரத்திற்குரிய கட்டுப்பாடுகள் கடுமையான முறையில் அமுலுக்குவரவுள்ளது. இந்நிலையில், இது குறித்த விதிமுறைகள் மற்றும் விலக்குகள் போன்றவை குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ளதாவது, பிற நாடுகளில் இருந்து வரும் பிரிட்டன் மக்கள் அனைவரும் வரும் வெள்ளிக்கிழமை முதல் நாட்டினுள் நுழைய கொரோனா வைரஸிற்கு எதிர்மறையான ஆதாரங்களை நிரூபிக்க வேண்டும். மேலும் நாட்டிலிருந்து புறப்படும் நேரத்திற்கு 72 மணி நேரத்திற்குள் முன்பாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மேலும் இவற்றை பின்பற்றாத பயணிகள் 500 பவுண்டுகள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் படகுகள், விமானங்கள், ரயில்கள் போன்ற எந்த வழியிலும் பயணிக்கும் மக்கள் இந்த விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விதிமுறை பிரிட்டன் குடிமக்களுக்கும் பொருந்தும். மேலும் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வரவுள்ளது.

மேலும் அரசாங்கத்தின் Travel Corridars என்ற பட்டியலில் இல்லாத இடங்களிலிருந்து வருபவர்கள் சுமார் பத்து நாட்களுக்கு தங்களை சுய தனிமை செய்து கொள்ள வேண்டும். மேலும் பரிசோதனை செய்வதற்கு போதுமான வசதி இல்லாத நாடுகளும் மற்றும் இது தொடர்புடைய சிக்கல்கள் உள்ள நாடுகளுக்கும் ஆரம்பத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, செயின்ட் லூசியா பார்படாஸ், ஆண்டிகுவா மற்றும் பார்புடா போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு  ஆறு நாட்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பால்க்லாண்ட் தீவுகள்,அசென்சன் தீவுகள் மற்றும் செயின்ட் ஹெலினா போன்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு நிரந்தரமான விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானம், சர்வதேச ரயில் மற்றும் கடல் மார்க்கமாக சரக்குகளை ஏற்றி வரும் ஓட்டுநர்கள் ஆகிய போக்குவரத்து ஊழியர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 97% உணர் திறன் மற்றும் 99% விவர  குறிப்புடன் மற்ற அனைத்து வகையான சோதனைகளை போல பி.சி.ஆர் சோதனைகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |