Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் காணாமல் போன தாய், மகள் இறந்ததாக தகவல் ..போலீஸ் தீவிர விசாரணை ..!!

பிரிட்டனில் காணாமல் போன தாய் மற்றும் அவரின் குழந்தை இறந்துவிட்டதாக தகவல் வந்த நிலையில் சடலத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பிரிட்டனின் கிளவுஸிஸ்டர்ஷியர் கவுண்டியை சேர்ந்த 25 வயதான பென்னிலி புர்க் மற்றும் அவரின் இரண்டு வயது மகள் ஜெல்லிக்கா இருவரும் கடந்த 1ஆம் தேதி காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை போலீசார் தேடும் வழக்கில் அது தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது.புர்க்கின் இன்னொரு குழந்தை கண்டுபுடிக்கப்பட்டது. ஆனால் புர்க் மற்றும் அவரின் இரண்டு வயது மகளான ஜெல்லிக்காவை  கொலை செய்ததாக 50 வயதான நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளது .

இது தொடர்பாக டிடெக்ட்டிவ் சூப்பர்டென்ட் கிரம் மெக்கி கூறுகையில் காணாமல் போன இருவர் தொடர்பான விசாரணையை  கொலை விசாரணையாக மாற்றியுள்ளோம். மேலும் இந்த வழக்கு தொடர்பாக யாருக்கும் தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கும்படி அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |