பிரிட்டனில் வரும் மே 17ஆம் தேதியிலிருந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது தொடர்பில் அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது.
பிரிட்டன் அரசு, வரும் மே 17 லிலிருந்து இறுதிச் சடங்குகளில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதாவது பிரிட்டனில், இறுதிசடங்கில் 30 நபர்கள் மட்டும் தான் பங்கேற்க முடியும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது. பிரிட்டன் அரசு தற்போது படிப்படியாக விதிமுறைகளை தளர்த்தி வருவதால் ஜூன் மாதத்தில் இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் நாட்டில் தற்போது கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளதால், விதிமுறைகளை ஒரு மாதத்திற்கு முன்பே தளர்த்த அரசு முடிவெடுத்திருக்கிறது. அதாவது இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி எவ்வளவு நபர்கள் பங்கேற்க முடியுமோ அவ்வளவு பேர் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பிரிட்டனில் தற்போது திருமண நிகழ்ச்சிகளில் 15 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 17ஆம் தேதியிலிருந்து 30 நபர்கள் வரை பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து ஜூன் மாதத்திலிருந்து இந்த விதிமுறைகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டுவிடும் என்று கூறப்பட்டுள்ளது.