பிரிட்டனில் இளவரச தம்பதியினர் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.
உலகிலேயே பிரிட்டனில் தான் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பிரிட்டனில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தற்போது வரை ஒரு கோடியே 20 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் நிலையாக முன்களப்பணியாளர்கள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது கணவர் 99 வயதுடைய பிலிப்பிற்கும் கடந்த மாதத்தில் கொரோனாவிற்கும் எதிரான தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் மற்றும் 73 வயதுடைய அவரின் மனைவி கமிலாவும் நேற்று முன்தினம் தடுப்பூசி செலுத்துக்கொண்டனர். ஆனால்எந்த நிறுவனத்தின்தடுப்பூசி இவர்களுக்குசெலுத்தப்பட்டது என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.