பிரிட்டனில் நேற்று மாயமான 11 வயது சிறுவன் குறித்த தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
பிரிட்டனில் உள்ள வடக்கு யார்க்ஷைரில் பகுதியில் இருக்கும் மிடில்ஸ்பரோவில் ஜான் கோனர்ஸ் என்ற 11 வயது சிறுவன் நேற்று மாயமாகிவிட்டார். இந்நிலையில் காவல்துறையினர் அந்த சிறுவனின் புகைப்படத்தை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். மேலும் மாயமான அன்று அச்சிறுவன் டிராக்சூட் பாட்டம்ஸ் கருப்பு நிறத்திலும், ஒரு ஜம்பர் மற்றும் கருப்பு, ஆரஞ்சு நிறத்தில் நைக் ட்ரெயினர் ஷூ அணிந்திருந்தாராம்.
மேலும் அச்சிறுவன் தினந்தோறும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டுமாம். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக மருந்து உட்கொள்ளாமல் இருப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையினர் சிறுவன் குறித்து தகவல் அறிந்தவர்கள் உடனடியாக 101 மேற்கோள் 072999 என்ற எண்ணிற்கு அழைக்குமாறு கூறியுள்ளனர்.
மேலும் கடந்த வாரத்தில் பல குழந்தைகளை கடத்துவதற்கு முயற்சிகள் நடந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.