Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் வேலை பாதுகாப்பு திட்டம் நீட்டிப்பு… மகிழ்ச்சியில் மக்கள் ..!!

பிரிட்டனில் வேலை பாதுகாப்பு பர்லோ திட்டத்தை மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்க போவதாக நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இன்று நிதியமைச்சர் ரிஷி சுனக் பட்ஜெட் உரையில் பிரிட்டன் அதன் மிகப்பெரிய வேலை பாதுகாப்பு திட்டத்தை 5 மாதங்களுக்கு நீடிக்க போவதாக அறிவிக்க உள்ளார். இந்த திட்டத்தின் கீழ் வரும் தொழிலாளர்கள் அவர்கள் எந்த வேலையும் செய்யாமல் 80% வரை சம்பளத்த பெற முடியும் .மேலும் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 6,00,000 சுய  தொழிலாளர்கள் அரசாங்க உதவிக்கு தகுதி பெறுவார்கள்.

2018- 19 ஆண்டில் சுய தொழில் புரிந்த தொழிலாளர்களிடம் இருந்து மட்டுமே  விண்ணப்பங்களை அரசாங்கம் அனுமதித்தது .ஆனால் இப்போது சுய தொழில் செய்வதாக முதலில் அறிவித்தவர்களுக்கும் செல்ப் எம்பிளாய்மெண்ட் இன்கம் சப்போர்ட் ஸ்கீமின்  கீழ் உதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |