பிரிட்டனில் 159 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி மேலும் 23 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தோனேசியாவை சேர்ந்த Reynhard Sinaga(23) என்ற மாணவன் ஸ்டுடென்ட் விசாவில் 2007 பிரிட்டன் வந்து மான்செஸ்டர் பகுதியில் வாழ்ந்து வருகிறார். அவர் தன் வீட்டிற்க்கு 159 ஆண்களை கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு காவல்துறையினரிடம் சிக்கியபோது அவர் வீட்டின் சிசிடிவி காட்சிகளில் பதிவான சம்பவம் போது காவல் துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அந்த சிசிடிவியில் காட்சிகளில் Reynhard Sinaga பல ஆண்களை இரவு நேரங்களில் கடத்திவந்து போதைப் பொருள்களை கொடுத்து பயங்கரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனிடையே கடந்த 2020 டிசம்பர் 11ஆம் தேதி 40 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் மேலும் 23 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் அவன் மீது வழக்கு தொடர வேண்டாம் என்றும் தற்போது அவனுக்கு அளித்துள்ள தண்டனையே போதுமானது என கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.