Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அங்கீகாரம் அளித்த உலகின் விலை உயர்ந்த மருந்து ..1 டோஸின் விலை என்ன தெரியுமா ?

உலகின் மிக விலை உயர்ந்த மருந்திற்க்கு பிரிட்டன் சுகாதார அமைப்பான NHS  ஒப்புதல் அளித்துள்ளது .

பிரிட்டன் சுகாதார அமைப்பான NHS , முதுகெலும்பு தசை குறைபாடு(SMA ) என்ற  மரபணு கோளாறால் பாதிக்கப்படுகின்றன குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் குணப்படுத்துவதற்காக சோல்ஜென்சமா என்று அழைக்கப்படும் மருந்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது . இந்த மருந்து சிகிச்சை செய்ய 1 டோஸிற்கு  1.79 மில்லியன் டாலர் செலவாகிறது.இந்த (SMA )நோயுடன் பிறந்த குழந்தைகளின் ஆயுட்காலம் வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே .

இதுகுறித்து இங்கிலாந்து தலைமை நிர்வாகி Sir சைமன் ஸ்டீவன்ஸ் கூறுகையில், இந்த ஒப்பந்தம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் ,அவர்களின் பெற்றோர்களுக்கும் வாழ்க்கையையே மாற்றியமைக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் NHS கொரோனாவுக்கு  இடையில் அழுத்தத்தில் உள்ளது. தடுப்பூசி நடவடிக்கைகள் செலுத்திக் கொண்டு இருந்தாலும் இன்றைய ஒப்பந்தம் NHS  மில்லியன் கணக்கான நோயாளிகளை கவனித்து வருகிறது என்பதற்கான நினைவூட்டல் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |