பிரிட்டனில் ஓப்ரா வின்ஃப்ரேயின் பேட்டியில், இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி அரச குடும்பத்தின் மீது திட்டமிட்டு குற்றச்சாட்டுகள் முன்வைத்ததாக கூறப்பட்டுள்ளது.
பிரிட்டனில் சில மாதங்களுக்கு முன்பாக இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் ஓப்ரா வின்ஃப்ரேக்கு பேட்டி அளித்திருந்தனர். அப்போது அவர்கள் இருவரும் ராஜ குடும்பத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை கூறியதால், அரச குடும்பத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ராஜ குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரத்தை சேர்ந்தவர் மூலமாக கிடைத்த தகவலின்படி, இளவரசர் ஹரி அந்த நேர்காணலில் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது தெரிந்தும், அதை பற்றி கவலைப்படாமல், திட்டமிட்டு கருத்துக்களை கூறியதாக தெரிவித்துள்ளார். அதாவது இவ்வளவு துணிச்சலாக அரச குடும்பத்தின் மீது குற்றச்சாட்டுகளை இதற்கு முன் யாரும் கூறியதில்லை. எனவே அது திட்டமிட்டு செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.
மேலும் மேகன் திருமணத்திற்கு முன்பு வரை சுதந்திரமாக தன் கருத்துக்களை பேசி வந்திருக்கிறார். ஆனால் ராஜ குடும்பத்தின் உறுப்பினரான பின்பு அந்த சுதந்திரம் கிடைக்காததால் அவருக்கு மன குழப்பம் ஏற்பட்டிருக்கும் என்று ராஜ குடும்பத்தின் தகவல் சேகரிக்கும் ஒரு நபர் குறிப்பிட்டுள்ளார்.