Categories
உலக செய்திகள்

பிரிட்டன் இளவரசர் பிலிப்…. இறப்புக்கு காரணம் இதுதான்…. இறப்புச் சான்றிதழில் வெளியான தகவல்….!!

பிரிட்டன் இளவரசர் இறப்பு சான்றிதழ் வெளியானதில் அவர் முதிர் வயது காரணமாக இருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி காலமானார். இதனைத்தொடர்ந்து இளவரசர் அமைதியான முறையிலும் நல்ல மன நிம்மதியில் மரணம் அடைந்தார் என பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இளவரசரின் இறப்பு சான்றிதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதில் இளவரசர் பிலிப் முதிர் வயது காரணமாக இறந்துள்ளார் என்றும் அவரின் இறப்புக்கு வேறு நோய்கள் காரணம் அல்ல என்றும் அவரின் இருதய சிகிச்சைக்கும் இளவரசரின் மரணத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் இறப்புச் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |