பிரிட்டன் உலகிலேயே மலிவான தடுப்பூசியை தயாரித்து அதனை மக்களுக்கு செலுத்த தொடங்கியுள்ளது.
பிரிட்டன் உள்நாட்டு தயாரிப்பு மருந்தான அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு என்ற தடுப்பூசியை இன்று முதல் மக்களுக்கு அளிக்க தொடங்கியுள்ளது. மேலும் 82 வயதுடைய டயாலிசிஸ் நோயாளி பிரையன் பிங்கர் என்பவர் தான் ஆக்ஸ்போர்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்த மருந்தை எடுத்துக் கொண்ட முதல் நபராகும். மேலும் உலகிலேயே மிக குறைந்த விலையாகவும், எளிதில் போக்குவரத்திற்கு உரியதாகவும் இருந்ததால் இந்த தடுப்பு மருந்து அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசியை முதன்முதலாக வெளியிட்டுள்ளது.
சுமார் 5,30,000 டோஸ்கள் முதன் முறையாக இங்கிலாந்தில் இருக்கும் ஆறு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டமானது இனிவரும் நாட்களிலும் நூற்றுக்கணக்கான பிரிட்டானிய பகுதிகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும் இன்னும் சில மாதங்களில் பல ஆயிரக்கணக்கான டோஸ்கள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த மாதத்தில் பிரிட்டன் முதன்முதலாக பைசர் மற்றும் பயோஎன் டெக் நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசியை உபயோகப்படுத்த தொடங்கியிருந்தது.
மேலும் இந்த தடுப்பூசியை மிக குறைந்த வெப்பநிலையில் செயல்படக்கூடியது என்பதால் தற்போது வரை சுமார் ஒரு மில்லியன் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பிரிட்டனில் உருவாக்கப்பட்டுள்ள ஆக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி மிகவும் மலிவானது மற்றும் சாதாரணமான குளிர்சாதன பெட்டிகளில் வைத்து சேமிக்க முடியுமாம். மேலும் இந்த மருந்தானது போக்குவரத்திற்கான வசதி மற்றும் உபயோகத்தை எளிமையாக்குகிறது. மேலும் உலகிலேயே மலிவான ஆக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா என்ற தடுப்பூசியை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா அவசரகால உபயோகத்திற்க்காக ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.