பிரிட்டன் நாடு ஆஸ்ட்ராஜெனேகா என்ற கொரோனா தடுப்பூசிகளை 100 மில்லியன் ஆர்டர் செய்துள்ளது .
பிரிட்டன் நாடு ஆஸ்ட்ராஜெனேகா என்ற கொரோனா தடுப்பூசிகளை வாங்க உள்ள நிலையில் அதில் 10 மில்லியன் டோஸ்கள் சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவிலிருந்து வரும் என்று பிரிட்டன் அரசாங்க செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். பங்களாதேஷ் முதல் பிரேசில் வரையிலான நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு கோவிஷீல்ட் என்றழைக்கப்படும் ஆஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா வழங்கிவருகிறது.
மேலும் இந்திய உலக சுகாதார அமைப்பு மற்றும் கவி தடுப்பூசி கூட்டணி ஆதரவுடன் கோவாக்ஸ் திட்டத்திற்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி வருகிறது. தற்போது பிரிட்டன் நாட்டுக்கு 10 மில்லியன் டோஸ் வழங்குவதாக ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்க முடியாமல் போய்விடக்கூடாது என்பதற்காக SII உடன் பிரிட்டன் அரசு ஒப்பந்தத்தை பின்பற்றுவதாக அறிவித்துள்ளது.