பிரிட்டன் காவல்துறை அமைச்சர், கொரோனா கட்டுப்பாடுகளின் அடிப்படையில் மிதிவண்டி பயணமே சிறந்தது என்று கூறியுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் டவுனிங் என்ற தெருவிலிருந்து, கிழக்கு லண்டனில் அமைந்துள்ள ஒலிம்பிக் பூங்கா வரை சுமார் 7 மைல் தூரம் மிதிவண்டியில் பயணம் செய்ததற்தாக விமர்சிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை அமைச்சர் கிட் மால்தவுஸ் கூறியதாவது, ஊரடங்கு கட்டுப்பாட்டின் கீழ் மிதிவண்டி பயணங்கள் ஏற்றுக்கொள்ளதக்கவை தான் என்று கூறியுள்ளார்.
மேலும் மக்கள் உடற்பயிற்சி செய்யும் பொழுது உள்ளூர் வட்டாரத்திற்குள்ளாகவே இருக்க வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளார். மேலும் தற்போது உள்ளூர் என்பதற்கு வெளிப்படையான விளக்கம் தேவைப்படுகிறது. ஆனால் மக்கள் அனைவரும் உள்ளூர் என்பது என்ன என்பதை அறிவார்கள் என்றார். மேலும் காவல்துறை அமைச்சர் கூறியுள்ளதாவது, மக்கள் உண்மையாகவே உடற்பயிற்சி செய்வதற்கும், பிற காரணங்களுக்காக மற்றும் சமூக நோக்கம் போன்றவற்றிற்கும் வெளியே செல்லவில்லை என்றால் அது மிகவும் நியாயமானதே என்று தெரிவித்துள்ளார்.