பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன் எடுக்கும் தீர்மானத்தில் அவரின் மனைவி தலையிடுவதாக வெளிவந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவீத் விமர்சித்திருக்கிறார்.
பிரதமரின் கன்சர்வேட்டிவ் கட்சியினுடைய முன்னாள் துணைத் தலைவரான Michael Ashcroft புத்தகத்தில், பிரதமர் எடுக்கும் தீர்மானத்தில் அவரின் மனைவி கேரி எதிர்மறையாக செல்வாக்கு செலுத்துகிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சராக சஜித் ஜாவித், இவ்வாறான குற்றச்சாட்டுகள் கண்ணியம் இல்லாதது, பாலின வாதமுடையது, தவறானது மற்றும் நியாயமில்லாதது என்று கூறியிருக்கிறார்.
மேலும் இந்த குற்றச்சாட்டுகள் பெண் வெறுப்பு உடையது என்றும் கூறியிருக்கிறார். இது மட்டுமல்லாமல், அரசியல்வாதிகளுக்கு துணைவியாய் இருப்பவர்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் கேரியின் செய்தி தொடர்பாளர், கேரியின் நல்ல பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முன்னாள் அதிகாரிகள் முயல்கிறார்கள். அரசாங்கத்தில் எந்தவிதப் பங்கும் அவர் வகிக்கவில்லை. அவர் தனிப்பட்ட நபர் தான் என்று கூறியிருக்கிறார்.