லண்டனில் இருந்து பெங்களூர் வந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அது உருமாறிய புதிய வகை கொரோனா தொற்றா என்பதை கண்டறிய இரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பிரிட்டனில் மரபணு மாற்றம் பெற்றுள்ள புதிய வகை கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில், லண்டனில் இருந்து பெங்களூர் வந்த பயணிகளில் பெங்களூருக்கு கிழக்கு மண்டலத்தில் ஒரு பெண்னுக்கும், புவனஹள்ளி மண்டலத்தைச் சேர்ந்த இருவருக்கும் என மூவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆனால் அது புதிய கொரோனா தொற்றா என்பதை கண்டறிய அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக பெங்களூருவில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கபட்டன.
இதனிடையே லண்டனில் இருந்து ஆந்திரா வந்த 25 பேர் டெல்லியில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், ராஜமுந்திரியை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது ரத்த மாதிரி புதிய வகை கொரோனா சோதனைக்காக புனேவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பெண் ரயில் மூலம் தப்பி ஆந்திரா சென்றதாகவும், அவர் தேடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் பயணதித்த ரயில் பெட்டியில் சென்றவர்களை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.