Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மக்களின் வெறுப்பை சம்பாதித்த ஜிப்சிக்கள்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பிரிட்டன் நாட்டில் அதிக மக்களால் வெறுக்கப்படும் பட்டியல் ஜிப்சிகள் மற்றும் ஐரிஸ் பயணிகள் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

பிரிட்டனில் மக்கள் இஸ்லாமியர்களை எதிர்க்கும் வெறுப்புணர்வை போக்குவதற்காக ஒரு மாற்றம் உண்டாக்கும் வகையில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் பிரபலமில்லாத சமூகங்களின் பட்டியலில் முதலிடத்தில் ஜிப்சிகளும், ஐரிஸ் பயணிகளும் உள்ளனர். இரண்டாம் இடத்தில் இஸ்லாமியர்கள் இருக்கின்றனர்.

இஸ்லாமியர்கள், மற்ற இனத்தை சேர்ந்த சிறுபான்மையினர் குறித்து பிரிட்டன் மக்கள் நினைப்பது என்ன? என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் பிரிட்டன் மக்களில் சுமார் 25.9% சதவீதம் பேர் இஸ்லாமிய மக்களை வெறுக்கிறார்கள். இதில், 9.9% மக்கள் அவர்கள் மீது கடும் வெறுப்பு கொண்டிருக்கிறார்கள்.

மேலும் 44.6% மக்கள் ஜிப்சிகளையும், ஐரிஸ் பயணிகள் மீதும் வெறுப்புணர்வு கொண்டுள்ளனர். 8.5% மக்கள் யூத மக்களை வெறுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6.4% மக்கள் கறுப்பினத்தவர்களை வெறுக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |