நெதர்லாந்தின் கொரோனா விதிகளின்படி பிரிட்டன் மக்கள் நாட்டிற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஐரோப்பிய நாடான நெதர்லாந்து, பிரிட்டனை சேர்ந்த மக்கள் நாட்டிற்குள் நுழைய கூடாது என்று தடை விதித்துள்ளது. அதாவது டிசம்பர் 31-ஆம் தேதியன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியுள்ளது. இதன் காரணமாகவே ஜனவரி 1 முதல் சுமார் பத்து நபர்கள் நெதலாண்டில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று நாட்டின் எல்லைக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் நெதர்லாந்தின் கொரோனா விதிமுறைகளின்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியே இருந்து வரும் யாரும் நாட்டிற்குள் நுழைய அனுமதி கிடையாது என்று தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக ஆபத்து இருக்கும் நாடுகளில் இருந்து வருபவர்கள் மற்றும் நாட்டினுள் செல்ல அவசியமற்ற காரணங்களை கூறுபவர்கள் போன்றோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நெதர்லாந்தில் விதிக்கபட்டுள்ள தடையின் பட்டியலில் பிரிட்டனும் உள்ளது. மேலும் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படும் பத்து நபர்களும் அத்தியாவசிய காரணமின்றி உள்ளே நுழைய விரும்பியதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசிய தேவை இருக்கும் நபர்கள் மட்டும் தான் நெதர்லாந்து மற்றும் செங்கன் போன்ற பகுதிகளுக்குள் நுழைய அனுமதிக்க முடியும் என்று எல்லை காவல் துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும் அனுமதிக்கப்படாத நபர்களில் ஒருவர் தன் குடும்பத்தினரை பார்க்க விரும்பியுள்ளார். மற்றொருவர் ஹாலந்துக்கு செல்ல விரும்புவதாக கூறியுள்ளார். மேலும் இவை அனைத்துமே அவசியமற்ற பயணங்கள் என்று எல்லை காவல் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.