Categories
உலக செய்திகள்

பிரிட்டன் வருவதற்கு முன்பு… தந்தைக்கு உணர்ச்சிப்பூர்வமான கடிதம்… இளவரசர் ஹரியின் நெகிழ்ச்சி செயல்…!!!

தாத்தாவின் இறுதி சடங்கிற்கு வருவதற்கு முன் தந்தைக்கு மிகவும் உருக்கமான கடிதம் ஒன்றை இளவரசர் ஹரி எழுதியுள்ளார். 

பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமான நிலையில் அவரது மகனான சார்லஸ் தற்போது குடும்ப பொறுப்பை ஏற்றுள்ளார். இந்நிலையில் இளவரசர் ஹரி தாத்தாவின் இறுதி சடங்குக்கு வருவதற்குமுன் தன் தந்தையான சார்லஸ்க்கு மிகவும் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் நான் அரச குடும்பத்தை மதித்து நடப்பேன் என குறிப்பிட்டுள்ளார். இக்கடிதம் மிகவும் தனிப்பட்ட முறையில் எழுதப்பட்டுள்ளது. மேலும் இளவரசர் ஹரி அரச குடும்பப் பொறுப்புகளிலிருந்து விலகி ஓராண்டுக்கு  பிறகு மொத்த குடும்பத்தையும் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆகையால் குடும்பத்தினருக்கு தன் மீதான கோபம் இருக்கும் என இளவரசர் ஹரி உணர்ந்துள்ளார். மேலும் குடும்பத்தில் அமைதியான சூழல் இல்லை என்றும், எதையும் மனம் திறந்து பேசும் நிலையில் இல்லை என்றும் தெரிந்துகொண்ட இளவரசர் ஹரி  பிரிட்டன் செல்லும் முன்னதாகவே தனது தந்தைக்கு இந்த கடிதத்தை எழுதியுள்ளார். இதனை அடுத்து இளவரசர் ஹரி சிறிது நாள் பிரிட்டனில் தங்க வேண்டும் என சார்லஸ் ஆசைப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

Categories

Tech |