Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவில் அதிகரிக்கும் நெருக்கடி… உணவை தவிர்க்கும் மக்கள்… வெளியான கருத்துக்கணிப்பு…!!!!!

பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவு நெருக்கடி ஏற்பட்டிருப்பதன் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் உணவினை தவிர்த்து வருவதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த வருடத்தை விட 14.5% அதிகரித்ததன் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் 9.9 சதவீதமாக இருந்த நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 10.1 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. மேலும் இது கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்திருப்பதாக தேசிய புள்ளிகள் அலுவலகம் கூறியுள்ளது.

இந்த சூழலில் பிரித்தானியாவில் புதிதாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் படி மில்லியன் கணக்கான குடும்பங்கள் உணவை தவிர்த்து வருகிறது அல்லது ஆரோக்கியமான பொருட்களை வாங்க சிரமப்பட்டு வருகின்றார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் பிரித்தானியாவில் உள்ள 85 சதவிகித மக்கள் வாழ்க்கை செலவு பிரச்சனைகளின் விளைவாக உணவுப் பொருட்களை வாங்குவதற்கு குறைவாக செலவழித்து வருகின்றனர் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பதில் அளித்தவர்களில் பாதி பேர் தங்கள் முன்பு வாங்கியதை விட மலிவான தயாரிப்புகளை வாங்குவதாக கூறியுள்ளனர்.

மேலும் வசதியாக வாழ்ந்ததாக கூறியவர்களில் 47 சதவீதம் பேர் கூட உணவுக்காக செலவழிக்கும் படத்தை சேமிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். இதனை அடுத்து அனைத்து நுகர்வோரில் கிட்டத்தட்ட பாதி பேர் நெருக்கடிக்கு முன் ஒப்பிட்டு பார்க்கும்போது ஆரோக்கியமாக சாப்பிடுவது என்பது கடினமான ஒன்றாக இருப்பதாக கூறியுள்ளனர். 42 சதவீத குடும்பங்கள் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது குறைத்திருப்பதாகவும் 36 சதவிகித பேர் பல்பொருள் அங்காடிகள் பிற கடைகள் அல்லது ஆன்லைன் ஷாப்பிங் செய்வதாகவும் கருத்துக்கணிப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

Categories

Tech |