Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவில் கட்டுப்பாடுகள் தளர்வு …..! வெளியான முக்கிய அறிவிப்பு ….!!!

பிரித்தானியாவில் முக்கிய கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அந்நாட்டின் சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை  கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.அத்துடன் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப ஊரடங்கு தளர்வுகளும் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிரித்தானிய சுகாதார செயலாளரான  சஜித் ஜாவித் கூறும்போது,” 2 டோஸ் கொரோனா  தடுப்பூசி போடுவதால் நமக்கு பாதுகாப்பை அளிக்கிறது .மேலும் இழந்த சுதந்திரத்தை மீட்டெடுக்க உதவுகிறது. இந்த நிலையில்  திங்கட்கிழமை முதல் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் அல்லது 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆகியோர் தனிமைப்படுத்த தேவையில்லை.

இது நாம்  இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான மிகப்பெரிய படியாக இருக்கும் “என்று அவர் கூறினார்.மேலும் கூறுகையில் , “அறிகுறிகள் இன்றி கொரோனா தொற்று பாதிப்பு இருப்பவர்களை கண்டறிய மக்கள் வாரத்திற்கு 2 முறை rapid lateral flow  சோதனை செய்ய வேண்டும். அத்துடன் சுகாதாரம் மற்றும் சமூக பராமரிப்பு ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தால் அவர்கள் பணிக்குத் திரும்பும்போது இல்லை என்பதற்கான பிசிஆர் சோதனை முடிவை வழங்க வேண்டும். மேலும் 10 நாட்களுக்குள் rapid lateral flow சோதனை எடுக்க வேண்டும் ” என்று அவர் கூறியுள்ளார் .

Categories

Tech |