பிரித்தானி அரசு மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் முதலாம் அமைப்புகளில் பெருமளவில் ஊழியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியா, பிலிப்பைன்ஸ், கென்யா, மலேசியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து பணி மற்றும் பயிற்சிக்காக பிரிட்டானியாவிற்கு ஆட்களை அனுப்புவது தொடர்பாக அந்த நாடுகளுடன் பிரித்தானியா இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பிரத்தானியாவில் மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் முதலான அமைப்புகளில் பெருமளவில் பணியாளர் தட்டுப்பாடு நிலவு வருகின்றது.
மேலும் பிரத்தானிய அரசு மருத்துவமனைகளில் 105,000 பணியிடங்களும், முதியோர் இல்லங்கள் முதலாம் அமைப்புகளில் 165,000 பணியிடங்களும் காலியாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பிரத்தானிய மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணிக்கு சேர்வது 2015ல் 69 சதவீதமாக இருந்தது கடந்த வருடத்தில் 58 சதவீதமாக குறைந்து இருக்கின்றது.
அதனால் காலியாக இருக்கும் பணியிடங்களை வெளிநாட்டவர்களை கொண்டு நிரப்பும் நிலை பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ளது. பிரத்தானியாவில் அடுத்த பிரதமர் பதவியேற்றதும் அவர் இந்த விஷயத்தை உடனடியாக செய்து நிறைவேற்ற வேண்டும் என மருத்துவ துறையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கிட்டத்தட்ட அரசு மருத்துவமனைகள் முதல் பல்வேறு துறைகளில் இருப்போர் புதிதாக பிரித்தானியாவிற்கு பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக காத்திருக்கிறார்கள் எனவும் கூறலாம்.