Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவில் பரபரப்பு…. வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மூவர்…!!!!!!!

பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் துப்பாகி வெடிக்கும் சத்தம் கேட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், வீட்டில் இருந்து மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், 60 வயது கடந்த ஆண் மற்றும் பெண் இருவரும், 50 வயது கடந்த ஆண் ஒருவரும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மீட்கப்பட்டதாக தெரிய வந்திருக்கிறது.மேலும், கடுமையான தாக்குதல் நடைபெற்றதற்கான  ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக போலிஸ் தரப்பும் தெரிவித்துள்ளது. இந்நிலையில்  கொல்லப்பட்ட மூவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள் எனவும் போலீசார்  கூறியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தில், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இதனையடுத்து, சம்பவம் நடந்த பகுதியில் போலீசார்  குவிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் இதனை போலீசார்  கொலை வழக்காக குறிப்பிட்டு, விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Categories

Tech |