Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவில் 222 புலம் பெயர்ந்த சிறு குழந்தைகள் மாயம்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

பிரித்தானியாவில் 222 புலம் பெயர்ந்த சிறு பிள்ளைகள் மாயமாக இருப்பதாக ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. பெற்றோருடன் இல்லாமல் தனியாக வரும் புலம் பெயர்ந்த சிறு குழந்தைகளை நடத்தும் விதம் பற்றி விமர்சனம் எழுந்திருக்கிறது. இந்த கோட்டையில் மட்டும் 1,322 புலம் பெயர்ந்த சிறு குழந்தைகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி நிலவரப்படி அவர்களில் 22 சிறு குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றனர் எனவும் ஒரு தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் இல்லாமல் தனியாக வரும் இந்த பிள்ளைகள் நீண்ட கால காப்பகங்களை தங்க வைக்கப்படுவதற்கு பதில் தனியாக ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுகின்றார்கள்.

இந்த நிலையில் உள்துறை அலுவலகம் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காமலே இந்த குழந்தைகளை ஹோட்டல்களுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 1,322 புலம்பெயர்ந்த சிறு பிள்ளைகள் அப்படி ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி நிலவரப்படி அவர்களின் 222 சிறுபிள்ளைகள் மாயமாக இருக்கின்றன வேண்டும் அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனை அடுத்து புலம் பெயர்ந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை தனது முதல் கடமை போல் எண்ணிக் கொண்டிருக்கும் உள்துறை செயலாளரான சுவெல்லாவும் ஒரு குழந்தை ஹோட்டலில் இருந்து காணாமல் போகும் நிலையில் அவர்களை கண்டுபிடிப்பதற்காக உள்துறை அலுவலகம் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் சிறு குழந்தைகள் தனியாக ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுவது சரியல்ல இப்படி குழந்தைகள் தனியாக ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுகின்ற நிலையில் காணாமல் போகும் பிள்ளைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை ஏற்படுத்துவதாக சிறுவர்கள் தொடர்பிலான அமைப்பை ஒன்றைச் சேர்ந்த உள்ளூர் அதிகாரியான Louise gittens என்பவர் கூறியுள்ளார். மேலும் பிள்ளைகள் நிரந்தர தங்கும் இடங்களை சென்றடைவதை உறுதி செய்யும் விதமாக உடனடி திட்டம் ஒன்று தேவை என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |