பிரித்தானியா நாட்டில் 3 வாரங்களாக காணாமல்போன இளைஞர் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அதாவது நேதன் பிளீட்வுட் (Nathan Fleetwood) என்ற 21 வயது பிரித்தானிய வாலிபர் கடைசியாக கடந்த மார்ச் 27 ஆம் தேதி ஷ்ரோப்ஷயரின் ஷ்ரூஸ்பரியில் நண்பர்களுடன் இரவு வெளியே சென்றார். இதையடுத்து அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் மேற்கு மெர்சியா காவல்துறையினர் அவரை தேடிவந்தனர்.
கிட்டத்தட்ட 3 வாரங்கள் கழித்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை Severn ஆற்றில் Kingsland பாலத்திற்கு அடியில் மேற்கு மெர்சியா தேடல் மற்றும் மீட்பு குழுவினரால் பிளீட்வுட் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அதன்பின் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை எனவும் மேற்கு மெர்சியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.