பிரித்தானியாவில் ரகசியமாக உக்ரைனிய துருப்புகளுக்கு பிரிட்டிஷ் ராணுவம் பயிற்சியளித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தன் சமீபத்திய கீவ் பயணத்தின்போது, 120 ராணுவ வாகனங்களை அளிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு வாக்குறுதி அளித்தார். இச்சூல்நிலைியல் இந்த ராணுவ வாகனங்களை எவ்வாறு இயக்குவது என்பதை அறிய உக்ரைனிய போராளிகள் பிரித்தானியாவுக்கு வந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனிய துருப்புக்கள் பிரிட்டிஷ் மண்ணில் ராணுவ உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு பயிற்சி அளிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது கவனிக்கத்தக்கது.
பயிற்சி நடைபெறும் இடம் மற்றும் எத்தனை உக்ரைனிய வீரர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர் என்ற விபரங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இவ்வகையான பயிற்சி பெரும்பாலும் Wiltshire-ல் உள்ள Salisbury Plain-யின் ராணுவ பகுதியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. உக்ரைனிய பாதுகாப்பு தளபதிகள் அண்மையில் ஸ்டோர்மர் ராணுவ ஏவுகணை ஏவுதலை, Salisbury Plain-யின் ராணுவ பகுதியில் இருந்துதான் கவிழ்த்தனர். பிரித்தானியா நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்டோர்மர் அமைப்பு, ஜான்சனின் ராணுவஉதவி தொகுப்பின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு அனுப்பப்படுகிறது.