Categories
உலக செய்திகள்

பிரித்தானியா: சமையல் எண்ணெய் வாங்க…. மக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு….!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் காரணமாக பிரித்தானியா நாட்டில் சமையல் எண்ணெய் வாங்க சூப்பர் மார்க்கெட்டுகள் கட்டுப்பாடு விதித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யபடையெடுப்பால் விநியோக சங்கிலி பிரச்சனைகள் காரணமாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி Tesco சூப்பர் மார்கெட்டில் ஒரு வாடிக்கையாளர் 3 வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம்  Waitrose மற்றும் Morrisons-ல் ஒரு வாடிக்கையாளருக்கு 2 என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கான ஏராளமான சூரியகாந்தி எண்ணெய் உக்ரைனிலிருந்து வருகிறது.

ஒருசில சூப்பர் மார்க்கெட்டில் உக்ரைன் சூரியகாந்திஎண்ணெய், ஆலிவ் மற்றும் ராப்சீட் எண்ணெய்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அனைவருக்கும் எண்ணெய் கிடைப்பதை உறுதிசெய்ய தற்காலிகமாக இந்த நடவடிக்கை எடுத்து இருப்பதாக பிரிட்டிஷ் சில்லறை வணிகக் கூட்டமைப்பைச் சேர்ந்த டாம் ஹொல்டர் தெரிவித்து உள்ளார். வடிக்கையாளர்கள் மீதான தாக்கத்தை குறைக்க மாற்று சமையல் எண்ணெய்களின் உற்பத்தியை அதிகரிக்க விநியோகஸ்தர்களுடன் சில்லறை விற்பனையாளர்கள் பணிபுரிந்து வருவதாக டாம் தெரிவித்தார்.

Categories

Tech |