Categories
உலக செய்திகள்

பிரித்தானியா: நண்பரைக் கைவிட்டு எதிரணியில் சேர்ந்த சாஜித்… அதிர்ச்சியில் உறைந்த ரிஷி சுனக்….!!!!

பிரித்தானிய அரசியலில் இன்று நிலவும் குழப்பத்தின் பின்னணியில் உள்ளதாக கூறப்படுபவர்கள் இருவர். இதில் ஒருவர் முன்னாள் நிதியமைச்சரான ரிஷிசுனக், மற்றொருவர் முன்னாள் சுகாதாரச் செயலரான சாஜித் ஜாவித். இவர்கள் இரண்டு பேரும் தன் பதவிகளை ராஜினாமா செய்ததைத் அடுத்து, அமைச்சர்கள் பலர் ராஜினாமா செய்ய, போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய நிலை உருவாயிற்று. எனினும் போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் இருந்து முதலில் ராஜினாமா செய்தவர் சாஜித்தான்.

இதையடுத்துதான் ரிஷி ராஜினாமா செய்தார். இருப்பினும் இதுவரை போரிஸ் ஜான்சனின் ஆட்சி கவிழ்வதற்கு ரிஷிதான் காரணம், அவர்தான் போரிஸ் ஜான்சனை முதுகில் குத்திவிட்டார் என்றே பேசப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் சாஜித் மீண்டும் ஒரு சந்தர்ப்பவாத செயலைச் செய்திருக்கிறார். அதாவது திடீரென ரிஷியை எதிர்த்து போட்டியிடும் லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஆதரவளிப்பதாக சாஜித் தெரிவித்துள்ளார். புலம் பெயர்தல் பின்னணிகொண்ட சாஜித்தும், ரிஷியும் நண்பர்கள் என்பதை பலரும் அறிவார்கள்.

இந்த நிலையில் திடீரென்று தன் நண்பரைக் கைவிட்டு எதிரணியில் சேர்ந்துள்ளார் சாஜித். மேலும் சாஜித் தன் நண்பரான ரிஷியின் பொருளாதாரக் கொள்கைகளைத் தாக்கிப் பேசிவிட்டு, அவரைவிட்டு எதிரணியில் போய்ச் சேர்ந்துள்ளார். முன்வே பிரித்தானிய பாதுகாப்புச் செயலரான பென்வாலேஸ் லிஸ் ட்ரஸ்ஸுக்கு தன் ஆதரவைத் தெரிவித்ததே ரிஷிக்கு பெரிய அடியாக கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தற்போது அவரது நண்பரான சாஜித் ஜாவிதும் லிஸ் ட்ரஸ்ஸுக்கு தன் ஆதரவைத் தெரிவித்துள்ளது ரிஷிக்கு மிகப்பெரிய அடியாக கருதப்படுகிறது.

Categories

Tech |