Categories
உலக செய்திகள்

பிரித்தானியா: “ரயில் வேலை நிறுத்தங்கள்”…. தண்டிக்கப்படும் அப்பாவி மக்கள்…. அரசு விடுத்த எச்சரிக்கை….!!!!

பிரித்தானியா நாட்டில் நடைபெறவுள்ள ரயில் வேலை நிறுத்தங்கள் மில்லியன் கணக்கான அப்பாவி மக்களை தண்டிக்கும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியா நாட்டின் பொது போக்குவரத்தில் மிக முக்கியமாக ரயில் போக்குவரத்து இடம் பெற்றுள்ளது. மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என்று மில்லியன் கணக்கான மக்கள் பிரித்தானியாவின் ரயில் போக்குவரத்து சேவையை நம்பியுள்ளனர். இந்நிலையில் அடுத்த வாரம் ரயில் வேலை நிறுத்தங்கள் மேற்கொள்ளும் RMTன் முடிவு மில்லியன் கணக்கான பொதுமக்களை தண்டிக்கும் என பிரித்தானிய போக்குவரத்து செயலாளர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ள கருத்தில், பிரித்தானிய இப்போது நெருக்கடிகளின் உச்சநிலையில் இருக்கிறது. இது நாடு முழுதும் மக்களின் துன்பங்களை அதிகரிக்கும் என்று தெரிவித்தார். மேலும் தொழிற்சங்கமானது சேதமடைந்த தொழில்துறை நடவடிக்கையை தொடர வேண்டாம் என பலமுறை வலியுறுத்தபட்டதாகவும், அதற்கு பதில் பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள் என்றும் தெரிவித்தார்.

இதன் காரணமாக தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தங்களது பயணத்திட்டங்களை ஏற்பட்டுள்ள மாறுதல்களால் கூடுதல் மனஅழுத்ததை எதிர்கொள்வதாகவும், நோயாளிகள் தங்களது மருத்துவர்களின் சந்திப்புகளை ரத்துசெய்ய வேண்டிய கட்டாயத்திற்கு சென்றிருப்பதாகவும் ஷாப்ஸ் கூறினார். எனினும் சம்பளம், வேலைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கோரிக்கைகளை தீர்க்கும் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்து இருப்பதால், அடுத்தவாரம் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் பிரிட்டன் முழுதும் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய பாதைகளிலும் மேற்கொள்ளபடயிருக்கும் ரயில் வேலை நிறுத்தங்கள் பல்வேறு தசாப்தங்களில் பெரிதாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

அத்துடன் இந்த ரயில்வேலை நிறுத்தங்கள் செய்வாய் கிழமை அன்று லண்டன் அண்டர்கிரவுண்டிலும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு ரயில் வேலை நிறுத்தங்களால் ஆயிரக்கணக்கான வேலைகள் வெட்டப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தொழிலாளர்கள் பணவீக்கத்திற்கு கீழே ஊதிய உயர்வை எதிர்கொள்கின்றனர் என கூறினார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தொழிலாளர் கட்சியின் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர், ரயில் வேலை நிறுத்தம் பற்றிய சர்ச்சைகளை அரசாங்கம் கையாளுவதை விமர்சித்தார். மேலும் பழமைவாதி கட்சி இந்த விஷயத்தில் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறது என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி போரிஸ் ஜான்சன் மற்றும் ஷாப்ஸ் ஆகியோர் உண்மையில் வேலைநிறுத்தங்களை தொடரவே விரும்புகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

Categories

Tech |