சாத்தியமான 3-ஆம் உலகப் போரில் ரஷ்யாவை எதிர்த்துப் போரிடத் தயாராகுபடி ராணுவவீரர் ஒவ்வொருவருக்கும் பிரித்தானிய முதன்மை தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான விளாடிமிர் புடினின் கொலை வெறித்தாக்குதல் உலகளாவிய பாதுகாப்பின் அடித்தளத்தை உலுக்கி இருப்பதாக பிரித்தானியாவின் புது ராணுவத் தளபதி ஜெனரல் சர்பேட்ரிக் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் போரில் ரஷ்யாவை வெல்லக்கூடிய ஒரு இராணுவத்தை உருவாக்குவதாகவும் அவர் சபதம் செய்து உள்ளார். அத்துடன் துணிச்சல் மிகுந்த பிரித்தானிய துருப்புகள் ஐரோப்பாவில் மீண்டுமாக போரிடத் தயாராக வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.